`நிலங்களை வளைப்பது மட்டுமே முழுநேர வேலை!’ -அமைச்சர் கே.சி.வீரமணி குறித்து ஸ்டாலின் விமர்சனம்

Spread the love


திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதி தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஜோலார்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்டார். ஜோலார்பேட்டையில் போட்டியிடும் தேவராஜி, ஆம்பூரில் போட்டியிடும் வில்வநாதன், திருப்பத்தூரில் போட்டியிடும் நல்லதம்பி, வாணியம்பாடியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர் முகமது நயீம் ஆகியோரை முன்னிறுத்தி பேசிய ஸ்டாலின், “பழனிசாமி அமைச்சரவையில் வேலுமணி, தங்கமணி, வீரமணி என்று மூன்று மணிகள் இருக்கிறார்கள். இந்த மூவரும் அருமையான மணிகள். இதில் வேலுமணி அப்பட்டமாக ஊழல் செய்பவர். தங்கமணி சைலன்ட்டாக ஊழல் செய்வார்.

ஸ்டாலின்

இந்த மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி எப்படி ஊழல் செய்வார் என்பது இங்கு கூடியிருக்கிற உங்களுக்கே தெரியும். வீரமணி தன் அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி ஜோலார்பேட்டை பகுதியிலுள்ள மக்களுக்கும், மாவட்டத்துக்கும் எதையும் செய்யவில்லை. கொள்ளையடிப்பதில் மட்டுமே மும்முரமாக இருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள், வீரமணி மற்றும் அவரின் பினாமிகளின் வீடுகளில் ரெய்டு நடத்தினார்கள். அது என்ன ஆனது? என்ன நடவடிக்கையென்றும் இதுவரை தெரியவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மத்திய பா.ஜ.க அரசு பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு அடித்து ஆதாரங்களை திரட்டி அவர்களை கன்ட்ரோலில் வைத்துக்கொண்டார்கள். அதில் ஒருவர்தான் வீரமணி. இவரின் வேலையே மிரட்டி இடங்களை அடிமாட்டு விலைக்கு வளைப்பதுதான். இதிலெல்லாம் வீரமணி கெட்டிக்காரர். வீரமணி இந்த வேலையைப் பார்டைமாக செய்யவில்லை. ஃபுல் டைமும் அவருக்கு அதே வேலைதான்.

அமைச்சர் வீரமணி

வேலூரில் மையமான இடத்தை வளைக்கும் தகராறில் வீரமணியே நேரடியாக சம்பந்தப்பட்டார். அந்த விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றது. விசாரணை நடத்திய நீதியரசர்கள், ‘நிலம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் வீரமணியின் தலையீடு தனிப்பட்ட முறையில் இருக்கிறது. அமைச்சர் என்ற முறையில் இல்லை. அதனால், அவருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவையில்லை’ என்று தீர்ப்பு வழங்கியதுதான் வீரமணியின் வரலாறு. இப்படிப்பட்ட வீரமணியை இந்த தேர்தலில் நிராகரிக்கணுமா? வேண்டாமா? பச்சை துண்டுப் போட்டுக்கொண்டால் பழனிசாமி விவசாயியா? பச்சைத் துரோகி அவர். எடப்பாடி தொகுதியில் பழனிசாமி டெபாசிட் கூட வாங்க முடியாது’’ என்றார் ஸ்டாலின்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: