நியூசி., மீண்டும் தோல்வி

Spread the love

தாகா: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்னில் தோல்வியடைந்தது. 

வங்கதேசம் சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. அனைத்து போட்டிகளும் தாகாவில் நடக்கின்றன. முதல் போட்டியில் வங்கதேசம் வென்றது. நேற்று இரண்டாவது போட்டியில் ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்தது. 

வங்கதேச அணிக்கு முகமது நைம் (39), லிட்டன் தாஸ் (33) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. சாகிப் அல் ஹசன் (12) கைவிட்ட போதும், கேப்டன் மகமதுல்லா 32 பந்தில் 37 ரன் எடுத்தார். வங்கதேச அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன் எடுத்தது. நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா 3 விக்கெட் சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியை ரவிந்திரா (10), பிளண்டல் (6) கைவிட்டனர். வில் யங்குடன் (22) சேர்ந்து கேப்டன் டாம் லதாம் (67) அரைசதம் அடித்த போதும் அது வெற்றிக்கு போதவில்லை. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 137 ரன் மட்டும் எடுத்தது. 4 ரன்னில் வென்ற வங்கதேச அணி 2–0 என தொடரில் முன்னிலை பெற்றது. 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: