நார்த் பிரிட்ஜ் ரோட்டில் விபத்து – 73 வயது ஆடவர் மரணம்; டாக்சி ஓட்டுநர் கைது

Spread the love


இன்று காலை நார்த் பிரிட்ஜ் ரோட்டில் (North Bridge Road) ஏற்பட்ட வாகன விபத்தில் 73 வயது ஆடவர் மாண்டார்.

சவுத் பிரிட்ஜ் ரோட்டை (South Bridge Road) நோக்கிச் செல்லும் நார்த் பிரிட்ஜ் ரோட் அருகே டாக்சியும் பாதசாரி ஒருவரும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து இன்று அதிகாலை சுமார் 12.40 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டது.

அந்த 55 வயது டாக்சி ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி, மரணம் விளைவித்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய ஓட்டுநர் ஏற்பாடுகளை உடனடியாக ரத்து செய்துவிட்டதாகவும் காவல்துறையின் விசாரணைக்கு அவர் உதவி வருவதாகவும் ComfortDelGro நிறுவனம் CNAவிடம் சொன்னது.

நடந்த அசம்பாவிதம் குறித்து வருத்தம் தெரிவித்த நிறுவனம், இறந்தவரின் குடும்பத்தாருக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *