நாடு திரும்புகிறார் ஷபாலி

Spread the love

புதுடில்லி: ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக, இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்புகிறார் ஷபாலி. 

இங்கிலாந்தில் பெண்களுக்கான ‘தி ஹன்டிரடு’ (100 பந்து) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவில் இருந்து ‘டுவென்டி–20’ அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, ஷபாலி வர்மா, தீப்தி என ஐந்து பேர் பங்கேற்றனர். இதனிடையே இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’, ஒரு பகலிரவு டெஸ்டில் பங்கேற்க உள்ளது. 

இதற்குத் தயாராகும் வகையில் இந்திய பெண்கள் அணியினர் தற்போது பெங்களூரு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஹர்மன்பிரீத், மந்தனா ஏற்கனவே நாடு திரும்பிய நிலையில், தற்போது பர்மிங்காம் போனிக்ஸ் அணிக்காக விளையாடிய ஷபாலியும் நாடு திரும்ப உள்ளார். இதனால் இன்று நடக்கும் ‘எலிமினேட்டர்’ போட்டியில் இவர் பங்கேற்க மாட்டார். 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: