‘நவரசா’வை கிரிக்கெட்டில் காட்டிய ஆண்ட்ரே ரசல்… அதிவேக அரைசதம் அடித்து ஐபிஎல்-க்கு முன்னோட்டம்! | andre russell scores fastest half century in caribbean premier league

Spread the love

ரசல் மேனியா, எதிரணியை ஜுரத்தில் தள்ள, ஜமைக்காவின் ஸ்கோர், 233 என்று மாற, ஒரே ஓவரில், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஓபெட் மெக்ராய்தான் இறுதி ஓவரை வீச வந்தார். முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்தானே? முந்தைய ஓவரில், தனது அணியின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான தண்டனையை வழங்க, பீஸ்ட் மோடுக்கு மாறி ரசல் காத்திருந்தார்.

சரி, ஆறு பந்துகளில், இன்னும் என்ன செய்ய இருக்கிறார், ரசல் என்ற ஆவல் மேலோங்கியது. முதல் பந்தைச் சந்தித்த ப்ரிடோட்ரியஸ், “உங்களுக்காச்சு, ஓபெட்டுக்காச்சு”, என சமர்த்தாக ஒரு ரன்னோடு, நான் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு நகர்ந்து விட்டார்.

அடுத்த இரண்டு பந்துகளும், அரக்கப்பரக்க, அந்தரத்தில் பறந்து, அம்பயரைக்கூட, இரண்டு கைகளையும் தூக்கி, அபயம் எனச் சொல்ல வைத்தன. யார்க்கர்களால் ரன்னெடுக்க விடாமல் தடுக்கலாம் என்பதெல்லாம், ரசலிடம் நடக்காமல் போக, அந்த இரண்டு சிக்ஸர்களின் முடிவில், பத்து பந்துகளில், 42 ரன்கள் என பதற வைத்தார், ரசல். அதற்கடுத்த பந்தையே, பதற்றத்தில் ஓபெட் நோ பாலாக்கினார். அதற்குப் பரிகாரமாக, வீசிய அடுத்த பந்தில், நினைத்திருந்தால், ஒரு ரன்னுக்கு ஓடி இருக்கலாம். ஆனால், ஸ்ட்ரைக்கை தன்னிடமே வைத்துக் கொள்ள ரசல் விரும்ப, அது டாட் பாலானது.

பந்து பௌலரிடமிருந்து விடுபடும் வரை மட்டுமே, அது அவர்களது கட்டுப்பாட்டில். அதன்பின், அதன் பாதையையும், போட்டியின் போக்கையும், ஒருங்கே தீர்மானிப்பது ரசல்தானே! போட்டியில், ஒருபந்து மட்டுமே எஞ்சி இருந்த நிலையில், பவுண்டரியோடு, 46 ரன்களை அடைந்திருந்தார் ரசல். அரைசதம் தவறவிடப்படுமோ என எதிர்பார்க்கப்பட, இறுதிப் பந்தில், ஓபெட் வீசிய ஷார்ட் பால், ரசலிடம் அடிவாங்கி, டீப் மிட் விக்கெட்டுக்கு முன்னேறி, அங்கிருந்த ஃபீல்டருக்கும் ஹலோ சொல்லி, பவுண்டரி லைனுக்குள் அடைக்கலம் புகுந்தது.

வெறும் 14 பந்துகளில், தனது அதிவேக அரைசதத்தை, ரசல் பூர்த்தி செய்தார். கரீபியன் லீக் வரலாற்றில் அடிக்கப்பட்ட, அதிவேக அரைசதம் இதுதான். இதற்கு முன்னதாக, 2019 சீசனில், டூமினி 15 பந்துகளில் அடித்த அரைசதம்தான் அதிவேகமானதாக இருந்தது. அதை ரசல் முறியடித்துள்ளார்.

255 ரன்களை ஜமைக்கா குவித்தது. இந்தத் தொடரின் வரலாற்றில் நிர்ணயிக்கப்பட்ட, இரண்டாவது அதிகபட்ச இலக்கு இது. லூசியா அணி, 17.3 ஓவர்களில், 135 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக, 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஜமைக்கா.

சில நாட்களுக்கு முன்னதாக, டேரன் சமி, மேற்கிந்தியத் தீவுகள், நடக்க இருக்கும், உலக டி20 தொடரிலும் வென்று, கோப்பையைக் கைப்பற்றும் என்றும், அந்தத் தொடரின் நாயகனாக, ஆண்ட்ரே ரசல் இருப்பார் என்றும், ஆருடம் கணித்திருந்தார். அவர் சொன்னவை உண்மையாகுமோ எனத் தோன்ற வைப்பதற்குரிய ஆரம்ப அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ளன.

எதிரணியின் நம்பிக்கையை, உருக்கிக் கரைக்கும் ரசவாதம்தானே ரசல்!

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: