நல்ல தூக்கத்துக்கு என்ன வழி? – TamilSeithi News & Current Affairs

Spread the loveImages

  • sleep (1)

இரவில் தூங்கினாலும் பாதியில் கண்விழித்து மறுபடியும் தூங்கமுடியாமல்போகும் பிரச்சினை நம்மில் பலர் எதிர்கொள்ளும் ஒன்று. 

1. தினமும் ஒரே நேரத்தில் தூங்கப் பழகிக்கொள்ள வேண்டும்

இரவு நேரத்தில் எப்போது சோர்வாக இருப்பீர்கள் என்று ஆராயவேண்டும். தினமும் அந்த நேரத்தில் உறங்கச் செல்லவேண்டும். அதேபோல் காலையில் ஒரே நேரத்தில் கண் விழிக்கவேண்டும். அந்தப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் தூக்கம் சீராக இருக்கும்.

2. இரவில் தூங்குவதற்குமுன் கண்கள் அதிக வெளிச்சத்தை எதிர்கொள்ளாமல் கட்டுப்படுத்த வேண்டும்

– இரவில் மின்னியல் திரைகளின்முன் அதிகநேரம் செலவிடுவதைத் தவிர்க்கவேண்டும்.

– தூங்கும் நேரம் நெருங்கும்போது அறையில் வெளிச்சத்தைக் குறைக்கவேண்டும்.

3. தூங்கும் முன் உடலுக்கு ஓய்வு கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கத்தைக் கொண்டிருக்கலாம்

– தூங்குவதற்குமுன் அவசரமில்லாமல் மனதுக்கு இதம் தரும் வகையில் நீண்ட குளியல் ஒன்று போடலாம்

– புத்தகம் படிக்கலாம்

4. சுகமான தூக்கம் தரும் படுக்கை, தலையணை ஆகியவற்றைப் பயன்படுத்திப் பார்க்கலாம்

இந்தக் குறிப்புகளைக் கவனத்தில் கொண்டு நல்ல தூக்கத்தை அனுபவியுங்கள்!

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *