நடிகர் சல்மான் கானுக்கு சண்டிகர் காவல்துறை சம்மன்

Spread the love

சண்டிகர்: நகை கடை அதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும் படி நடிகர் சல்மான் கானுக்கு சண்டிகர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அருண் குப்தா என்பவர் அளித்த புகாரில் 2018-ம் ஆண்டு 3 கோடி ரூபாய் செலவில் ஒரு நகைக்கடையை திறந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த கடைக்கு விளம்பரம் செய்வதாக உறுதி அளித்த சல்மான் கான் பிறகு விளம்பரம் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரிப்பதற்காக ஜூலை 13-ம் தேதி நேரில் ஆஜராகும் படி சல்மான் கான், அவரது தங்கை ஆல்விரா மற்றும் 6 பேருக்கு சண்டிகர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: