நடால் விலகல் | ஆகஸ்ட் 20, 2021

Spread the love

ஸ்பெயினின் நடால், காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் இந்த ஆண்டுக்கான மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகினார். ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபெல் நடால் 35. இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள இவர், பிரெஞ்ச் ஓபன் தொடரின் போது இடது கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்தால் விம்பிள்டன், டோக்கியோ ஒலிம்பிக், டொரண்டோ மாஸ்டர்ஸ் தொடர்களில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நடால், நடப்பு சீசனுக்கான மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதனால் இவர், வரும் ஆக. 30ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் துவங்கவுள்ள யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்க மாட்டார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: