(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சுவீடன் : பெரும்பாலும் இளம் பெண்களே ஈடுபடும் நடன நீச்சலில் ஆண்களும் இறங்கியுள்ளனர். ஸ்டாக்ஹோமிலுள்ள நடுத்தர வயதைச் சேர்ந்த நண்பர்கள் குழு ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் குறைக்கும் நோக்கில் அந்தப் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
18 பேர் அடங்கிய குழு பயிற்றுவிப்பாளரின் உதவியோடு அடுத்த வாரம் ஆண்களுக்கான நடன நீச்சல் போட்டியில் பங்கேற்கவுள்ளது.
மருத்துவர், ரயில் ஓட்டுநர், இயக்குநர், ஆசிரியர் என்று முழுநேர வேலைகளுக்கு நடுவில் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் சுவீடனைச் சேர்ந்த ஆடவர்கள்.
மற்ற நடன நீச்சல் போட்டியாளர்களைப் போல உடற்கட்டு இல்லாவிட்டாலும் போட்டியில் மனதாரப் பங்குபெறவுள்ளதாகக் கூறியுள்ளனர் அவர்கள்.
அதிக உடல் வலிமை இல்லாவிட்டாலும் தண்ணீருக்குள் மூச்சை அடக்குவதில் குழு தேர்ச்சி பெற்றுள்ளதாக அவர்களது பயிற்றுவிப்பாளர் கூறினார்.
நாளடைவில் ஆண்களுக்கான நடன நீச்சல், ஒலிம்பிக் போட்டிகளில் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே குழுவின் ஆசை.