தோனி நியமனம் சரியா * என்ன சொல்கிறார் கபில் தேவ்

Spread the love

கோல்கட்டா: ‘‘உலக கோப்பை அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது சரியான முடிவு,’’ என கபில் தேவ் தெரிவித்தார்.

எமிரேட்ஸ், ஓமனில் ‘டுவென்டி–20’ உலககோப்பை தொடர் வரும் அக். 17–நவ. 14ல் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி 40, நியமிக்கப்பட்டார். தோனியை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு தான் ஓய்வு பெற்றார். இந்நிலையில் இவரை மீண்டும் அணிக்கு அழைத்தது சரியல்ல என விமர்சனம் எழுந்தன. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, ‘தோனி சென்னை அணி கேப்டனாக இருப்பதால், ஆதாயம் தரும் வகையில் இரட்டை பதவி வகிக்கக் கூடாது,’ என இந்திய கிரிக்கெட் போர்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் ஆலோசகராவதில் சிக்கல் நீடிக்கிறது. 

இருப்பினும் தோனி நியமனத்தை வரவேற்றுள்ளார் முன்னாள் கேப்டன் கபில் தேவ், 62.

இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை (1983) வென்று அவர் கூறியது: 

ஓய்வு பெற்ற வீரர்கள் குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆண்டுக்குப் பின் தான் மீண்டும் கிரிக்கெட் பக்கம் திரும்ப வரவேண்டும் என்பது பொதுவாக எனது கருத்து. ஆனால் உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில் இது ஸ்பெஷலானது. தவிர பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கோரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தோனியை ஆலோசகராக நியமித்தது சரியானது முடிவு. 

இவ்வாறு அவர் கூறினார். 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: