தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்கான நீச்சல் நிலையத்தில் 15,000 பேர் போட்டியை ரசிக்கலாம்

Spread the love


Images

  • Tok

    படம்: AFP

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்கான நீச்சல் நிலையத்தில் 15,000 பேர் போட்டியை ரசிக்கலாம் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீச்சல் நிலையம் கட்டச் சுமார் 523 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது.

நான்கு மாடிகள் கொண்ட அந்த நீச்சல் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 90 விழுக்காடு நிறைவடைந்திருப்பதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்தது.

நீச்சல் நிலையத்தைக் கடந்த பிப்ரவரி மாதமே கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் உயர்ந்த தரமும் அதிநவீன வசதிகளும் கொண்ட நீச்சல் நிலையத்தை அமைக்க விரும்பியதால் கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்கான மற்ற விளையாட்டு அரங்கங்கள் திறப்பதற்குத் தயார்நிலையில் உள்ளன.

போட்டிகள் ஜூலை 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதி நிறைவுபெறும்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *