தோக்கியோ 2020 உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி: தேசிய அணியின் பங்கேற்பு மாபெரும் வெற்றி – விளையாட்டுத்துறை அதிகாரிகள்

Spread the loveதோக்கியோ 2020 உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தேசிய அணியின் பங்கேற்பை மாபெரும் வெற்றி எனச் சிங்கப்பூர் விளையாட்டுத்துறை அதிகாரிகள் வருணித்துள்ளனர்.

சிங்கப்பூர் இரண்டு தங்கங்களைக் கைப்பற்றியது.

எதிர்காலப் போட்டிகளில் விளையாட்டாளர்களுக்கு ஆதரவும் வளங்களும் தேவைப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விளையாட்டுகளுக்குப் பிந்தைய மாநாட்டில் அந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

சிங்கப்பூர் அணியை 10 விளையாட்டாளர்கள் பிரதிநிதித்தனர்.

6 விதமான விளையாட்டுகளில், 18 பிரிவுகளில் அவர்கள் போட்டியிட்டனர்.

மொத்தம் 5 புதிய தேசிய சாதனைகளைப் படைத்தனர்.

7 தனிப்பட்ட சிறந்த நேரம், பருவத்தின் 2 சிறந்த நேரம் ஆகியவற்றையும் அவர்கள் சாதித்தனர்.

COVID-19க்கு இடையே, போட்டிகள் குறைவாக இருந்தபோதும்,முதல்முறையாக விளையாட்டுகளில் பங்கேற்றுத் திறன் காட்டியவர்களையும் அதிகாரிகள் பாராட்டினர்.

நீச்சல் வீரர்கள் டோ வீ சூங் (Toh Wei Soong), சோஃபி சூன் (Sophie Soon), எடைதூக்கும் பிரிவில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த முதல் வீராங்கனை நூர் அய்னி முகமது யாஸ்லி உள்ளிட்டோர் அவர்களில் அடங்குவர்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: