தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பிரிட்டிஷ் ஓட்டப்பந்தய வீரர் ஊக்க மருந்து பயன்படுத்தினாரா?

Spread the loveImages

  • Britain athe

    படம்: REUTERS

தோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிஜிண்டு உஜா (Chijindu Ujah) ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்க மருந்துக்கு எதிரான விதிமுறைகளை அவர் மீறியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

AIU என்னும் திடல்தடப் போட்டி நேர்மைப் பிரிவு அதனைத் தெரிவித்தது.

பிரிட்டனைச் சேர்ந்த அவர், 4 X 100 மீட்டர் ஆண்கள் அஞ்சல் ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்றார்.

தோக்கியோவில் அமைந்துள்ள ஊக்க மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வுக்கூடம், போட்டிகளுக்கு இடையே நடத்திய சோதனையில் தென்பட்ட கண்டுபிடிப்புகளைப் பிரிவிடம் தெரிவித்தது.

Ostarine, S-23 போன்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை அவர் பயன்படுத்தியதாகச் சோதனையில் தெரியவந்தது.

உஜா ஊக்க மருந்து எடுத்துக்கொண்டது உறுதியானால், அவருடைய அணியைச் சேர்ந்த மற்ற மூவரின் பதக்கங்களும் பறிக்கப்படும் சாத்தியம் உள்ளது.  

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: