தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அழைக்க ஜப்பான் திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) திரு பைடனை அழைப்பது பற்றி நாடாளுமன்றக் கூட்டத்தில் கருத்துரைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
அடுத்த மாதம் திரு சுகா உச்சநிலை மாநாட்டிற்காக அமெரிக்கா செல்கிறார்.
அது தொடர்பான கேள்விகளின்போது அதிபர் பைடன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அழைக்கப்படுவாரா என்று கேட்கப்பட்டது.
அதற்குத் திரு சுகா “போட்டிகளுக்கு அழைப்பது இயல்பானதே” என்று கூறினார்.
ஏழு தொழில்வள நாடுகள் தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆதரவு வழங்கியுள்ளன என்று பிரதமர் சுகா கூறியதாக Kyodo செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளைக் காண வெளிநாட்டிலிருந்து ரசிகர்கள் வர அனுமதி இல்லை.
COVID-19 நோய்த்தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டி இவ்வாண்டு ஜூலை மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.