தொடக்கநிலை 3, 4 மாணவர்கள் உயர் மலாய், உயர் தமிழ் கற்றுக்கொள்ள வாய்ப்பு

Spread the love


தொடக்கநிலை மூன்றாம், நான்காம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், உயர் மலாய், உயர் தமிழ் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் கல்வியமைச்சு வழங்கவிருக்கிறது.

தொடக்கநிலை 3 மாணவர்கள் அடுத்த ஆண்டிலிருந்து உயர் மலாய் படிக்கலாம். 

தொடக்கநிலை 4 மாணவர்கள் 2023 இலிருந்து உயர் தமிழ் படிக்கலாம்.

இன்னும் அதிகமான மாணவர்கள் சிறு வயதிலிருந்தே தங்களின் மொழி, பண்பாடு ஆகியன பற்றித் தெரிந்துகொள்ள அது வழியமைக்கும்.

வெஸ்ட்வுட் தொடக்கப்பள்ளிக்குச் சென்ற கல்விக்கான இரண்டாம் அமைச்சர் டாக்டர் முகமது மாலிக்கி ஓஸ்மான் அது குறித்து அறிவித்தார்.

அந்தப் பள்ளியில் புதிய பாடக்கலைத் திட்டம் முன்னோடியாகச் சோதிக்கப்பட்டது.

அது மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்த உதவியிருக்கிறது.

புத்தாக்கமான நடவடிக்கைகள், விளையாட்டுகள் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் இலக்கணத்தையும், வாக்கிய அமைப்பு முறைகளையும் கற்றுக்கொண்டனர்.

கடந்த ஆண்டு 35 பள்ளிகள் அந்த முன்னோடித் திட்டத்தில் பங்கேற்றன.

இவ்வாண்டு, 54 பள்ளிகள் பங்கேற்கின்றன.

தொடக்கநிலை 3, 4இல் பயிலும் மாணவர்களுக்கு உயர் சீன மொழி ஏற்கனவே பள்ளிகளில் போதிக்கப்படுகிறது. 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *