தேறி வருகிறார் பீலே

Spread the love

சாவ் பாலோ: கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலம் தேறி வருகிறார். 

பிரேசில் அணியின் முன்னாள் கேப்டன்  பீலே, 80. மூன்று முறை உலக கோப்பை (1958, 1962, 1970) வென்ற அணியில் இடம் பெற்ற பெருமைமிக்கவர். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். பிரேசில் அணிக்காக அதிக கோல் (77) அடித்துள்ளார்.

இவரது பெருங்குடலின் வலது பக்கத்தில் இருந்த கட்டியை ஆப்பரேஷன் செய்து அகற்றினர். தொடர்ந்து ஒருவாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனத் தெரிகிறது. 

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்,‘‘பீலேயின் முன்னேற்றம் திருப்தியாக உள்ளது. அவராக எழுகிறார், நன்றாக பேசுகிறார்,’ என தெரிவித்தது. பீலே வெளியிட்ட ‘இன்ஸ்டாகிராம்’ செய்தியில், ‘ஒவ்வொரு நாளும் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக உணர்கிறேன்,’ என தெரிவித்துள்ளார். 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: