தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா: இலங்கை மீண்டும் தோல்வி

Spread the love

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2வது ‘டுவென்டி–20’ போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி, தொடரை கைப்பற்றியது. குயின்டன் டி காக் அரைசதம் கடந்தார்.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. கொழும்புவில் 2வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணிக்கு தினேஷ் சண்டிமால் (5) ஏமாற்றினார். குசால் பெரேரா (30), பானுகா ராஜபக்சா (20) ஆறுதல் தந்தனர். தனஞ்செயா டி சில்வா (4), கேப்டன் தசுன் ஷனகா (10) சோபிக்கவில்லை. இலங்கை அணி 18.1 ஓவரில், 103 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் மார்க்ராம், ஷாம்சி தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

 

சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ரீசா ஹென்டிரிக்ஸ் (18) சுமாரான துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய குயின்டன் டி காக் (58*), மார்க்ராம் (21*) கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 14.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 105 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: