தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கா ஏன் தலையிடுகிறது?: கொதிக்கும் சீனா

Spread the love


Images

  • south china sea

    படம்: AFP

தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று பிலிப்பீன்ஸில் உள்ள சீனத் தூதரம் கூறியுள்ளது.

சர்ச்சைக்குரிய கடல் பகுதியின் உரிமை விவகாரத்தில் பிலிப்பீன்ஸுக்கும் சீனாவுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அதில் அமெரிக்கா, பிலிப்பீன்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஹூல்யன் ஃபெலிப் (Julian Felipe) Reef பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கப்பல்களைச் சீனா மீட்டுக்கொள்ள வேண்டும் என்று பிலிப்பீன்ஸ் கோரியுள்ளது.

அரசதந்திரரீதியாக அதற்கான முறையீட்டையும் அது தாக்கல் செய்துள்ளது.

ஆனால் சீனா அந்தப் பகுதிக்கு உரிமை கோரியுள்ளது.

அமெரிக்காவின் தலையீடு அந்த வட்டாரத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் கீழறுப்பதாகச் சீனத் தூதரகம் Twitter பக்கத்தில் குறிப்பிட்டது.

அந்த வட்டாரத்தில் அமெரிக்கா மோதலைத் தூண்டி விடுவதாகவும் அது குற்றம் சாட்டியது.

அமெரிக்கா பிலிப்பீஸின் பக்கம் இருப்பது, நிலைமையை மோசமாக்கக்கூடும் என்று சீனத் தூதரகம் எச்சரித்தது.

வெளிநாட்டுக் குறுக்கீடு இல்லாமல், பெய்ச்சிங்கும் மணிலாவும் அந்த விவகாரத்தைத் தீர்த்துக்கொள்ள முடியும் என அது தெரிவித்தது. 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: