தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி – சிங்கப்பூர் அணிக்கான உணவு, தங்கும் வசதிகள் சரிசெய்யப்பட்டுள்ளன

Spread the love


Images

  • SEA Games Problems

    (படம்: SNOC)

பிலிப்பின்சில் நடைபெறும் 30ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணிக்கான உணவு, தங்கும் வசதிகள் போன்றவற்றில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் அணியை வழிநடத்தும் திருவாட்டி ஜுலியெனா சியாவ் (Juliana Seow) அதனைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் காற்பந்து, வலைப் பந்து, தரைப் பந்து அணிகளுக்கு ஏற்கத்-தாகாத உணவும் தங்கும் வசதிகளும் வழங்கப்பட்டதாக ஊடகங்கள் தகவல் அளித்திருந்தன.

ஆரம்பக்கட்ட பிரச்சினைகளைச் சரிசெய்ய ஃபிலிப்பின்சில் போட்டி ஏற்பட்டாளர்களுடன் சிங்கப்பூர் அணி கூட்டாகப் பணியாற்றுவதாகத் திருவாட்டி சியாவ் கூறினார்.

விளையாட்டாளர்களுக்கான உணவும் தங்கும் வசதிகளும் மேம்பட்டிருப்பதை அவர் சுட்டினார்.

போட்டி ஏற்பாட்டாளர்களும் தொண்டூழியர்களும் காட்டும் உபசரிப்பையும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் சிங்கப்பூர் அணி வரவேற்பதாகத் திருவாட்டி சியாவ் சொன்னார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *