தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி 2019 : நீர்ப் பந்தில் சிங்கப்பூர்ப் பெண்கள் அணிக்கு வெள்ளிப் பதக்கம்

Spread the love


Images

  • Water polo

    படம்: SNOC

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி 2019- இன் நீர்ப் பந்தாட்டத்தில் சிங்கப்பூருக்கான முதல் பதக்கத்தைப் பெண்கள் அணி வென்றுள்ளது.

இரண்டாவது நிலையில் வந்த பெண்கள் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது.

சிங்கப்பூர் அணி 13 – 6 என்ற கணக்கில் பிலிப்பீன்ஸ் அணியை வீழ்த்தியது.

போட்டியில் தங்கப் பதக்கத்தைத் தாய்லந்து தட்டிச்சென்றது.

பிலிப்பீன்ஸ் வெண்கலத்தை கைப்பற்றியது.

கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் 20-2 என்ற கணக்கில் தாய்லந்திடம் தோற்றது. அதனால் தங்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

இன்று மாலை சிங்கப்பூர் ஆண்கள் நீர்ப் பந்து அணி தாய்லந்து அணியைச் சந்திக்கிறது.

அதில் வெற்றி பெற்றால் சிங்கப்பூருக்கு வெள்ளி கிடைக்கும்.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை Toggle வழியாகக் கண்டு ரசிக்கலாம். 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *