துருக்கியில் ஒரே நாளில் 37,000க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

Spread the love


துருக்கியில் ஒரே நாளில் 37,303 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதுவே கிருமித்தொற்று தொடங்கியதிலிருந்து அங்கு பதிவான ஆக அதிகமான தினசரி் எண்ணிக்கை.

திங்கட்கிழமையன்று (29 மார்ச்) அந்நாட்டு அரசாங்கம், கிருமித்தொற்றுக் குறித்த கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கப் போவதாக அறிவித்திருந்தது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட ஒரே மாதத்திற்குள் அவை மீண்டும் கடுமையாக்கப்படவுள்ளன.

அதோடு, ரமடான் நோன்பு மாதத்தின் போது வார இறுதிகளில் நாடு முழுதும் முடக்கநிலை நடப்பில் இருக்கும் என்றும் துருக்கிய அதிபர் தாயிப் எர்டோகன் (Tayyip Erdogan) தெரிவித்தார்.

துருக்கியில் ஒரே நாளில் கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 155. கிருமித்தொற்றால் மாண்டோரின் மொத்த எண்ணிக்கை 31,385.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: