தீபாவளி 2019 : திரைக்கு வரும் புதிய படங்கள்

Spread the love


தீபாவளிப் பண்டிகையின்போது திரைப்பட ரசிகர்களுக்கு என்றுமே தனி ஆனந்தம் தான்.

தீபாவளிக்காலத்தில் மக்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பொழுதைக் கழிக்கத் திரைப்பட அரங்குகளுக்குச் செல்வார்கள்.
நல்ல கதைகளைக் கொண்ட படங்கள் வசூலைக் குவிக்கும்.

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3 தமிழ்ப்படங்கள் தீபாவளியின்போது வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதன் முன்னோட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிகில் :
இயக்குநர் அட்லி முன்னணி நடிகரான விஜயைக் கொண்டு பிகில் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் மூன்று வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காற்பந்தை மையமாகக் கொண்டு அந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் நயன்தாரா, விவேக், கதிர், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

கைதி :
நடிகர் கார்த்தி கைதியாக நடிக்கும் திரைப்படத்தை இயக்குநர் லோக்கேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மாறுபட்ட கதைக்களம் என்பதால் திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

சங்கத் தமிழன்:
சங்கத் தமிழன் திரைப்படத்தை இயக்குநர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

சூரி, நாசர் ஆகியோரும் நடித்துள்ளனர். அரசியலைப் பின்னணியாகக் கொண்ட கதை சங்கத்தமிழன். 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *