Spread the love
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதையொட்டி அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க நேற்றிரவு திருவண்ணாமலைக்கு வந்த ஸ்டாலின், எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரியில் தங்கினார். இன்றைய காலை உணவை அங்கு முடித்த ஸ்டாலின், 10.45 மணிக்கு புறப்பட்டு, காந்திசிலை சந்திப்பில் எ.வ.வேலு உள்ளிட்ட 8 வேட்பாளர்களையும் ஆதரித்துப் பேசினார்.