திருமங்கலம் அருகே வெளிநாட்டு நிறுவனத்தில் ரூ.15 கோடி மோசடி: அரசியல் பிரமுகர் மகன்கள் உட்பட 4 பேர் கைது | Thirumangalam: 4 arrested for fraud

Spread the love

வெளிநாட்டு நிறுவனங்களில் ரூ.15 கோடி முறைகேடு செய்தது தொடர்பாக, மதுரை திருமங்கலத்தில் அரசியல் பிரமுகர் மகன்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் அமந்தா மர்பி. இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அமந்தா மர்பி கடந்த 1992-ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள ஆலங்குளத்தில் டெடி எக்ஸ்போர்ட் என்ற நிறுவத்தை தொடங்கினார்.

இதன்மூலம் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட சில நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. இவரது மகன் லண்டனிலும், மகள்கள் கொடைக்கானலிலும் படித்தனர். கணவர் இறந்த நிலையில், 2014 ல் மகள்களுடன் கொடைக்கானலில் தங்கினார்.

இதனால் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த திருமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் கவாஸ்கர் உள்ளிட்ட ஊழியர்களின் மீதான நம்பிக்கையில், அவர்களிடம் நிர்வாகத்தின் முழு பொறுப்பை ஒப்படைத்தார்.

2015 முதல் மகன், மகள்களுடன் லண்டனுக்குச் சென்று, அங்கே தங்கிவிட்டார். நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகளை கவாஸ்கர், ஆடிட்டர்கள் பாஸ்கரன், கொண்டப்பன் உள்ளிட்டோர் கவனித்தனர். அவ்வப்போது, லண்டனில் இருந்து அமந்தா மர்பி, அவரது மகன், மகள்கள் ஆலங்குளத்துக்கு வந்து சென்றனர். நிர்வாகத்தின் வரவு, செலவில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் வெளியிலுள்ள ஆடிட்டர் ஒருவர் மூலம் நடத்திய ஆய்வில், ‘டெடி’ குரூப் ஆப் நிறுவனங்களில் சில முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது. 2014-2019 வரை கம்பெனி பெயரில் வங்கிகளில் கடன் பெற்றும், அங்கு தயாரிக்கும் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றுவிட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்ததாக கணக்கு எழுதப்பட்டு இருந்தது.

இதன்மூலம் சுமார் ரூ.15 கோடி வரை முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது. கவாஸ்கர் அவரது பெற்றோர், சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் மீது சொத்துக்கள் வாங்கியதும் தெரிந்தது. இதற்கு நிறுவன ஊழியர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இது தொடர்பாக அமந்தா மர்பி திருமங்கலம் தாலுகா காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கவாஸ்கர், அவரது தந்தை நாகராஜன், சகோதரர் ரோகன் மற்றும் நிறுவன ஆடிட்டர்கள் பாஸ்கரன், கொண்டப்பன் மற்றும் ஊழியர்கள், உறவினர்கள் ஆனந்தி, விஜயா, ஜெகதாளன், பிரிதர்ஷனி, அரசி,பரிமளம், விஜயலட்சுமி, லைலா, சுமதி, சேகர், கருப்பையா ஆகிய 17 பேர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் கவாஸ்கர், சகோதரர் ரோகன், கணக்காளர் பாஸ்கரன், ஜெகதாளன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *