“திமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்” – விழுப்புரம் பரப்புரையில் அமித் ஷா

Spread the love


அமித் ஷா

பட மூலாதாரம், AMIT SHAH TWITTER

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தனியார் கல்லூரியில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பரப்புரை கூட்டத்தில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். திருக்கோவிலூர் விஷ்ணுவும் சிவனும் அமைந்த சிறப்பான இடம் என்று குறிப்பிட்டு தனது உரையை தொடங்கினார் அவர்.

“இந்த தேர்தலை பாரதிய ஜனதா கட்சி நடத்தவில்லை, தேர்தல் ஆணையம் நடத்துகிறது. ஏப்ரல் 6 என்பது பாஜக நிறுவப்பட்ட நாள், அந்நாளில் தேசிய ஜனநாயக கூட்டணியானது இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.

“காங்கிரஸ் திமுக இரண்டும் லஞ்சம், ஊழல், ரௌடியிசம், நில அபகரிப்பு, சொந்த குடும்பத்தின் வளர்ச்சி என இதை மட்டுமே இரண்டு கட்சிகளும் நம்பி அரசியல் செய்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சி நிர்வாகத்தை, பிரதமர் மோதி வழியிலும் எம்ஜிஆர் வழியிலும் கொண்டு சென்று கொண்டிருக்கிறது,” என்றார்‌ அமித்ஷா.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *