திண்டுக்கல் கலக்கல் வெற்றி * வெளியேறியது கோவை அணி

Spread the love

சென்னை: டி.என்.பி.எல்., தொடரின் ‘எலிமினேட்டர்’ போட்டியில் திண்டுக்கல் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., தொடரின் ஐந்தாவது சீசன் நடத்தப்படுகிறது. இதன் பைனலுக்கு திருச்சி அணி முன்னேறியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ‘எலிமினேட்டர்’ போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்று, நான்காவது இடம் பெற்ற திண்டுக்கல், கோவை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திண்டுக்கல் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

கோவை அணிக்கு கங்கா ஸ்ரீதர் ராஜு (5), சுரேஷ் குமார் (19) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. கேப்டன் ஷாருக்கான் (28) சற்று உதவினார். சுதர்சன், 36 வது பந்தில் அரைசதம் கடந்தார். கோவை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 143 ரன்கள் மட்டும் எடுத்தது. சுதர்சன் (57 ரன், 40 பந்து) அவுட்டாகாமல் இருந்தார். திண்டுக்கல் சார்பில் குர்ஜப்னீத் சிங் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 54 ரன் மட்டும் எடுத்தது. இதன் பின் ஹரி நிஷாந்த் 59 ரன் எடுக்க வெற்றி எளிதானது. திண்டுக்கல் அணி 17.3 ஓவரில் 144/5 ரன் எடுத்து, 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது. விவேக் (52) அவுட்டாகாமல் இருந்தார். கோவை அணி தொடரில் இருந்து வெளியேறியது. 

அடுத்து என்ன

நாளை சென்னை, திண்டுக்கல் அணிகள் மோதும் ‘தகுதிச்சுற்று 2’ நடக்கிறது. இதில் வெல்லும் அணி, ஆக. 15ல் நடக்கும் பைனலில் திருச்சி அணியை சந்திக்கும். 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: