தற்காலிக பயிற்சியாளர் டிராவிட் * நியூசிலாந்து தொடரில்…

Spread the love

புதுடில்லி: இந்திய அணி தற்காலிக பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட உள்ளார்.

இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 59. எமிரேட்சில் நடக்கவுள்ள ‘டி–20’ உலக கோப்பை தொடருடன் இவரது பதவிக்காலம் முடிகிறது. மீண்டும் பயிற்சியாளராக விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டார். சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் கேப்டன் டிராவிட்டும், பதவியை விரும்பவில்லை. 

புதிய பயிற்சியாளருக்கான தேடல் நடந்து வருகிறது. இதனிடையே உலக கோப்பை தொடருக்குப் பின் இந்தியா வரும் நியூசிலாந்து அணி மூன்று ‘டி–20’, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கன இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட உள்ளார். 

இதுகுறித்து வெளியான செய்தி:

பயிற்சியாளராக பொருத்தமான நபரை முதலில் கண்டறிய வேண்டும். பல்வேறு விண்ணப்பங்களை பெற்று அதில் ஒருவரை தேர்வு செய்ய விரும்பவில்லை. இது அவருக்கும், இந்திய கிரிக்கெட் போர்டுக்கும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தும். இதனால் சிறந்த ஒருவரை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அதுவரை டிராவிட் தற்காலிக பயிற்சியாளராக இருப்பார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: