தமிழ் மக்களின் உரிமைக்காய் செயற்பட்ட இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்! – உதயன்

Spread the love


மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று (1) தனது 80 வயதில் காலமானார்.

ஒடுக்குமுறைக்கு உள்ளான இனத்திற்காக கடினமான சூழலில் எல்லாம் துணிந்து பணி செய்தவர் நெடுந்தீவை பிறப்பிடமாக கொண்ட இராஜப்பு ஜோசேப் ஆண்டகை.

அத்துடன தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்ததுடன், மனித உரிமை மீறல்களுக்காக போராடிய இவர், தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுறுதி கொண்டவர் இருந்தார்.

செப்டெம்பர் 2008ம் ஆண்டுக்கு பிறகு 1,46,679 பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்ட கணக்கை வெளிப்படுத்தியவர். ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரியதற்காக, மேர்வின் சில்வாவால் துரோகியாக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்டகையின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *