தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Spread the love


தேர்தல் விழிப்புணர்வு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும். அன்றே முடிவுகளும் தெரியவரும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன். அதில் 44 தொகுதிகள் பட்டியல் வகுப்பினருக்கும், இரு தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டவை.

கூட்டணிகள் யாருடன்?

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மறுமலர்ச்சி திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 25 இடங்களிலும், விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மதிமுக ஆறு இடங்களில் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறது.

மறுபுறம் தற்போது ஆளும் அதிமுக, பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளிலும், பாமக 23 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *