தமிழக தேர்தல் 2021: அனல் பறக்கும் பிரசாரத்தில் இன்று நடந்தது என்ன?

Spread the love


தினகரன்

பட மூலாதாரம், TTV DINAKARAN TWITTER

தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல், உண்மையான அண்ணாவின் தொண்டர்களுக்கும் தமிழின துரோகிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய டிடிவி தினகரன், “தீய சக்தி என எம்ஜிஆரால் அடையாளம் கட்டப்பட்ட திமுகவை இத்தேர்தலில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்றார். தமிழ்நாட்டின் வெளிப்படையான உண்மையான அம்மாவின் ஆட்சியை ஊழலற்ற ஆட்சியை கொண்டுவர வாக்களிக்க வேண்டிய வெற்றிச் சின்னம் குக்கர் சின்னம் என்றும் பரப்புரை செய்தார் டி.டி.வி. தினகரன்.

“தேர்தல் கால வருமான வரித்துறை சோதனை மிரட்டல் உத்தி” – கமல் ஹாசன்

தேர்தல் காலங்களில் வருமான வரித்துறை நடத்தி வரும் திடீர் சோதனைகள், பிற அரசியல் கட்சிகளை மிரட்டும் மத்திய அரசின் உத்தி போல நினைக்கத் தோன்றுகிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர், “எங்கள் வேட்பாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தவர்கள். எங்களுடன் இருப்பவர்களுக்கு ஏற்கனவே தொழில் இருக்கிறது. அவர்கள் இங்கே மக்களுக்கான கடமையை செய்ய வந்திருக்கிறார்கள். என் எஞ்சிய வாழ் நாட்களை மக்களுக்காக செலவிட விரும்புகிறேன். இந்த கூட்டம் காசு கொடுத்து சேர்த்தது இல்லை. இந்த தொகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். வீரத்தின் உச்ச கட்டம் அகிம்சை. நல்லதை தொடர்ந்து செய்வது என் கடமை. ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சி இல்லை. வேலை இப்போது தான் தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். தமிழகம் சீரமையும்.,’ என்று பேசினார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: