தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கை சொல்வது என்ன?

Spread the love


விடுதலை சிறுத்தைகள் கட்சி

பட மூலாதாரம், DR RAVIKUMAR MP TWITTER

தனியார் துறையில் இட ஒதுக்கீடு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை உள்ளிட்ட அம்சங்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விழுப்புரத்தில் வெளியிட்டார். அப்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உடனிருந்தார்.

இந்தத் தேர்தல் அறிக்கையில், இதற்கு முன்பாக நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டு, தற்போதைய தேர்தலுக்கான வாக்குறுதிகளை அக்கட்சி தெரிவித்திருக்கிறது.

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகத்திலிருந்து இடங்களை ஒதுக்கப்படுவதை நிறுத்துவது, பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை செயல்பாட்டுக்கு வர விடாமல் தடுப்பது, தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டு வருவது, ஆணவ கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்துவது, ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வலியுறுத்துவது ஆகியவற்றை தனது தேர்தல் அறிக்கையில் வி.சி.க முன்வைத்துள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *