தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: மேயர், துணை முதல்வராக இருந்தபோது என்ன செய்தார் ஸ்டாலின்?

Spread the love


குஷ்பு

பட மூலாதாரம், Kushbu Sundar

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை நகர மேயர் ஆக ஐந்து ஆண்டுகள் இருந்தபோதும் சரி, துணை முதல்வர், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்த ஐந்து காலத்திலும் சரி, மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சென்னையில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை ஈடுபட்டார். இதையொட்டி ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், சென்னையில் மேயர் ஆகவும் துணை முதல்வராகவும் இருந்த மு.க. ஸ்டாலின் நகர மக்களின் நலனுக்காக என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார்.

மழை காரணமாக சென்னையில் 3000 வீதிகளில் மழைநீர் தேங்கியது. அதன் காரணமாக 954 கி.மீ தூரத்துக்கு மழை நீர் தங்கு கடையின்றி வெளியேற நடவடிக்கை எடுத்தது என்று கூறிய அவர், தமது பதவிக்காலத்தில் குடிநீர் வசதி, மழைநீர் சேமிப்பு வசதி, கால்வாய் சுத்திகரிப்பு என எந்த திட்டத்தையும் ஸ்டாலின் செயல்படுத்தவில்லை என்று கூறினார்.

திமுகவிற்கு எடுத்துதான் பழக்கம் கொடுத்து பழக்கம் இல்லை. சென்ற ஒரு ஆண்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 5,500 நிவாரணம் வழங்கிய ஒரே அரசு எனது தலைமையிலான அதிமுக அரசு மட்டும்தான். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்போம், திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *