தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் அதிகரிப்பு| Dinamalar

Spread the love


சென்னை: ”சென்னையில் 3 சதவீதமாக இருந்த கொரோனா பாதிப்பு 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது; மாநிலம் முழுதும் கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்து உள்ளதால் அனைத்து வயதினரும் கவனமாக இருக்க வேண்டும்” என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையை ஆய்வு செய்தபின் அவர் அளித்த பேட்டி:மத்திய அரசு கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 10 நகரங்கள் பட்டியலை அறிவித்துள்ளது. அதில் சென்னை இல்லை. அதேநேரம் சென்னையில் கொரோனா தொற்று 3 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் 4368 படுக்கைகள் உட்பட மாநிலம் முழுதும் அரசு மருத்துவமனைகளில் 56 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.மேலும் 70 ஆயிரம் படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
தொற்று கூடுதலாக பதிவாகும் 600க்கும்மேற்பட்ட இடங்கள் நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுஉள்ளன.தமிழகத்தில் இறப்பு சதவீதம் அதிகரித்து வருகிறது. இதை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்; மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 10.40 லட்சம் கோவிஷீல்டு இரண்டு லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் நாளை வர உள்ளது.தனியார் மருத்துவ மனைகளில் தடுப்பூசியை அதிக விலைக்கு போடுவது குறித்து புகார் வந்தால் நடவடிக்கைள் எடுக்கப்படும்.தடுப்பூசியை 80 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளிலும் 20 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைகளிலும் போட்டுக் கொள்கின்றனர்.

தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சி கூட்டங்களில் தொண்டர்கள் முககவசம் அணிய வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்த வேண்டும்.எங்கு சென்றாலும் பொதுமக்கள் முககவசம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: