தப்பியோடிய குண்டர் கும்பல் உறுப்பினர் – YouTubeஇல் சமையல் காணொளிகள் பதிவு செய்து மாட்டிக்கொண்டார்

Spread the love


தப்பியோடிய இத்தாலியின் குண்டர் கும்பல் உறுப்பினர் ஒருவர், YouTubeஇல் சமையல் காணொளிகளைப் பதிவு செய்து காவல்துறையிடம் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

53 வயது மார்க் ஃபெரென் க்ளாவுட் பியார்ட் (Marc Feren Claude Biart), டோமினிகன் குடியரசில் உள்ள போக்கா சிக்கா (Boca Chica) என்ற ஊரில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

தனது இத்தாலியச் சமையல் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தப் போய், அவர் ஒளிந்திருந்த இடம் இத்தாலியக் காவல்துறைக்குத் தெரிந்துபோனது.

YouTubeஇல் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளில் அவர் தனது முகத்தை மறைத்திருந்தாலும், அவருடைய உடலில் பச்சை குத்தியிருந்த இடங்கள் அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டதாக இத்தாலியக் காவல்துறை கூறியது.

பியார்ட், 2014ஆம் ஆண்டிலிருந்து தேடப்பட்டு வந்தார்.

‘Ndrangheta என்ற குண்டர் கும்பல் சார்பாக நெதர்லந்துக்குப் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று இத்தாலிய அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் உத்தரவிட்டனர்.

‘Ndrangheta, உலகிலேயே ஆக மோசமான குண்டர் கும்பல்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது.

ஐரோப்பாவிற்குள் நுழையும் பெரும்பாலான போதைப்பொருள்கள் அதன் கட்டுப்பாட்டில் உள்ளன.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *