‘தனிமையில்’ ரவி சாஸ்திரி * கொரோனா உறுதி

Spread the love

லண்டன்: ரவி சாஸ்திரியை தொடர்ந்து பாரத் அருண், ஸ்ரீதருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 59. இவரிடம் நடந்த கொரோனா முதல் கட்ட விரைவு கொரோனா சோதனையில் (ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்) ‘பாசிட்டிவ்’ என வந்தது. தொடர்ந்து ஆர்டி–பிசிஆர் சோதனையிலும் கொரோனா உறுதி செய்யப்பட, 10 நாள் தனிமைப்படுத்தப்பட்டார் ரவி சாஸ்திரி. 

இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் பாரத் அருண், ஸ்ரீதருக்கு கொரோனா உறுதியானது. இவர்களும் தனிமைப்படுத்தப்பட்டதால், ஐந்தாவது டெஸ்டுக்கான அணியில் இணைய மாட்டர். 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் வெளியான செய்தியில்,‘ இரண்டாவது கட்ட சோதனையில் ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மான்செஸ்டரில் ஐந்தாவது டெஸ்ட் செப். 10ல் துவங்குகிறது. இது முடிந்த பிறகு தான், ரவி சாஸ்திரியின் தனிமைப்படுத்துதல் காலம் முடிவுக்கு வருகிறது. இதனால் இந்திய அணியினருடன் செல்ல மாட்டார். தவிர பாரத் அருண், ஸ்ரீதரும் தனிமைப்படுத்தப்பட்டனர்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரவி சாஸ்திரி உட்பட மூன்று பயிற்சியாளர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்க உள்ளது. 

 

வீரர்களுக்கு சிக்கலா

சமீபத்தில் லண்டன் ஓட்டலில் நடந்த தனது புத்தக வெளியீட்டு விழாவில் ரவி சாஸ்திரி பங்கேற்றார். தவிர மைதானத்தில் சுமார் 5000 வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்தும் பொதுவான ‘லிப்டில்’, சென்றதால் கொரோனா ஏற்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. இதே வழியை வீரர்களும் பயன்படுத்தினர். 

ரவி சாஸ்திரியுடன் கேப்டன் கோஹ்லி, பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் தொடர்பில் இருந்தனர். நான்காவது டெஸ்ட் முடிந்த நிலையில் அனைத்து வீரர்களுக்கும் இரண்டாவது கட்ட சோதனை செய்யப்படும். இதன் முடிவு முக்கியமானது. 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: