தந்தை செல்வாவின் 123வது ஜனனதினம் அனுஷ்டிப்பு!

Spread the love


மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 123வது ஜனன தின நிகழ்வு இன்று (31) நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா பூங்காவில் அமைந்துள்ள அன்னாரது சிலையருகில், குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவருமான பொன்.செல்வராஜா, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், தவிசாளர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், கட்சி மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியாவிலும் தந்தை செல்வாவின் 123வது ஜனனதின நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று காலை இடம்பெற்றது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *