தட்டுப்பிலுள்ள யாழ் முதல்வரை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு! – உதயன்

Spread the love


யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு வவுனியா கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்பட்ட யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்திப்பதற்காக சட்டத்தரணிகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகதில் கூடியுள்ளனர்.

இருந்தபோதிலும் அவர்களுக்குச் சட்டரீதியாக மணிவண்ணனை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மணிவண்ணனை சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு எழுத்து மூலம் கோரிக்கைவிடுத்து பத்துக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் காத்திருப்பதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்தரணி திருக்குமரன், இளங்குமரன், தனஞ்சயன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் அங்கு பிரசன்னமாகியுள்ளனர்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *