தடுப்பூசிகளுக்குக் கட்டணமாக எண்ணெய்… – TamilSeithi News & Current Affairs

Spread the love


வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ (Nicholas Maduro) தடுப்பூசிகளுக்குக் கட்டணமாக எண்ணெய் வழங்கவுள்ளதாக முன்னுரைத்துள்ளார்.

தற்போது அந்நாட்டில் இரண்டாம் கட்டமாகக் கிருமிப்பரவல் தலைதூக்கியுள்ளது.

வெனிசுவேலாவில் எண்ணெய்க் கப்பல்கள் உள்ளதாகவும், எண்ணெய் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராயிருப்பதாகவும் அதிபர் மடூரோ குறிப்பிட்டார்.

எண்ணெய் உற்பத்தியில் ஒரு பகுதியைப் பிரித்து, அதைக் கொண்டு தடுப்பூசி பெறலாம் என அவர் குறிப்பிட்டார்.

வெனிசுவேலாவில் இதுவரை ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி, சீனாவின் Sinopharmஇன் தடுப்பூசி ஆகியவற்றுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.

Covax திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறவுள்ள 2.4 மில்லியன் முறை பயன்படுத்தும் AstraZeneca தடுப்பூசிகளை ஏற்கப்போவதில்லை என Pan American Health Organizationஇடம் வெனிசுவேலா தெரிவித்துள்ளது.

உலகச் சுகாதார நிறுவனத்திடம் வெனிசுவேலா கடன் பாக்கி வைத்திருப்பதால், Covax திட்டத்தின் மூலம் இதுவரை அந்நாட்டுக்குத் தடுப்பூசி எதுவும் விநியோகிக்கப்படவில்லை.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: