தங்கும்விடுதிகளில் வசிக்கும் சுமார் 30,000 ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்படும்

Spread the love

சிங்கப்பூரில் 30 தங்கும்விடுதிகளில் வசிக்கும் சுமார் 30,000 ஊழியர்கள், எதிர்வரும் வாரங்களில் COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவிருக்கின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக அது செயல்படுத்தப்படும்.

திட்டத்தின் முதல் கட்டத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதிப் பெற்ற 9,000 ஊழியர்களில் கிட்டத்தட்ட 97 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

பொங்கோலில், புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சேவை வழங்கும் நிலையத்தின் திறப்பு விழாவில், மனிதவள அமைச்சுக்கான இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) அதனைத் தெரிவித்தார்.

சோதனை அடிப்படையில் அந்த நிலையம், இம்மாதம் 15-ஆம் தேதியிலிருந்து செயல்பட்டுவருகிறது.

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றுதல், மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், அறிமுகப் பயிற்சிகளில் ஈடுபடுதல் போன்றவற்றை ஒரே இடத்தில் பூர்த்திசெய்ய அது வகைசெய்கிறது.

அத்தகைய மேலும் 3 நிலையங்கள், யூனோஸ்,
தெங்கா ஆகிய வட்டாரங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ளன.

சுவா சு காங் வட்டாரத்திலும் அத்தகைய நிலையம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலையங்களில், தடுப்பூசி போடும் சேவையைத் தொடங்குவதற்கும் திட்டம் உள்ளதாகத் திரு. டான் சொன்னார். 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *