தகுந்த காரணமின்றி COVID-19 தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களுக்குக் கடுமையான தண்டனை – வத்திக்கன்

Spread the loveவத்திக்கன் (Vatican) தகுந்த காரணமின்றி COVID-19 தடுப்பூசி போட மறுக்கும் அதன் ஊழியர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அவர்கள் வேலையை இழக்கலாம் என்றும் அது எச்சரித்தது.

சுகாதாரக் காரணங்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாதவர்கள், குறைவான ஆள்களுடன் தொடர்பில் வரக்கூடிய வேலைக்கு மாற்றப்படலாம் என்று அது கூறியது.

புதிய வேலை பதவி இறக்கமாக இருந்தாலும், சம்பளத்தில் மாற்றம் இருக்காது என்று அது உறுதியளித்தது.

108 ஏக்கர் பரப்பளவு கொண்ட உலகின் ஆகச் சிறிய நாடான வத்திக்கனில் கடந்த மாதம் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியது.

அதனைப் பெற்றுக்கொண்ட முதல் சில நபர்களில் ஒருவர், 84 வயது போப் பிரான்சிஸ் (Pope Francis).

கிருமித்தொற்று மற்றவர்களைப் பாதிக்கும் அபாயம் உள்ளதால், தடுப்பூசி போட்டுக்கொள்வதே பொறுப்புணர்வு மிக்க செயல் என்று வத்திக்கன் கூறியது.  

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *