டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நுழைந்து இந்தியாவின் பவினாபென் வரலாற்றுச் சாதனை | I’ve never considered myself as a disabled person. Today, I’ve proved that nothing is impossible, says Patel

Spread the love


டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியிக்கு முன்னேறி இந்தியாவின் பவினாபென் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. செப். 5-ம் தேதி வரை நடைபெறும் இந்தவிளையாட்டில் 163 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து 54 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், 5 போ் கால்பந்து, ஜூடோ, பாராகனோ, பளுதூக்குதல், படகு போட்டி, துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வாலிபால், நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சோ் கூடைப்பந்து, வாள்சண்டை, ரக்பி, டென்னிஸ் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில், மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி கிளாஸ் 4 பிரிவில் இந்தியாவின் பவினாபென் ஹஸ்முக்பாய் படேல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். சீனாவில் மியா சேங்கை 7-11 11-7 11-4 9-11 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இவர், 2016ல் ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர்.

இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள பவினா பென், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் உலக சாம்பியன் யிங் ஜோவை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் தங்கம், இல்லாவிட்டால் வெள்ளிப் பதக்கம் என்று உறுதியுடன் அவர் களம் காணவிருக்கிறார்.

பவினா பென்னுக்கு இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தீபிகா மாலிக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தனது வெற்றி குறித்து பவினா பென், “நான் இதுவரை எந்த ஒரு தருணத்திலும் நான் ஒரு மாற்றுத்திறனாளி என நினைத்ததே இல்லை. இன்று நான் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: