டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ரூட்; சிராஜ், ராகுல் முன்னேற்றம் | ICC Test Rankings: Root closes in on top-ranked Williamson, Kohli firm on fifth spot

Spread the love


சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் இன்று வெளியி்ட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலி்ல் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலிடத்தை நெருங்கியுள்ளார். இந்திய கேப்டன் கோலி தொடர்ந்து 5-வது இடத்திலேயே உள்ளார்

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் 180 ரன்கள் சேர்த்து ரூட் ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் டெஸ்டிலும் ரூட் சதம் அடித்திருந்தார்.இதையடுத்து, தரவரிசையில் இரு இடங்கள் நகர்ந்து 2-வதுஇடத்துக்கு 893 புள்ளிகளுடன் முன்னேறியுள்ளார்.

நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன்901 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் 5-வது இடத்தில் இருந்த ரூட் தற்போது 2-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.

776 புள்ளிகளுடன் கோலி 5-வது இடத்திலும்,773 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்த கே.எல்.ராகுல் 19 இடங்கள் நகர்ந்து 37-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் ராகுல் அதிகபட்சமாக 8-வது இடம்வரை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சாளர்களில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன் 2-வது டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதையடுத்து, ஒரு இடங்கள் நகர்ந்து 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மார்க்உட் 37-வது இடத்திலும், 2-வது டெஸ்டில் 8 வி்க்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்சிராஜ் 18 இடங்கள்நகர்ந்து 38-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் 2 இடங்கள் முன்னேறி 8வது இடத்துக்கும், பஹீம் அஷ்ரம், 48-வது இடத்துக்கும் பவாத் ஆலம் 55-வது இடத்துக்கும் நகர்ந்துள்ளனர்.

மே.இ.தீவுகள் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை முதல் டெஸ்டில் வென்றது. இதில் மே.இ.தீவுகள் வீரர் பிளாக்வுட்9 இடங்கள் நகர்ந்து 35-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்

ஆல்ரவுண்டர் ஹேஸன் ஹோல்டர் 5 இடங்கள் நகர்ந்து 414 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பிராத்வெய்ட் 18 இடங்கள் நகர்ந்து 45-வது இடத்தை அடைந்துள்ளார். வேகப்பந்துவீச்சாளற் சீலஸ் 58வது இடத்துக்கும், ஆட்டநாயகன் விருது வென்ற ரோச் 11-வது இடத்துக்கும் நகர்ந்துள்ளனர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: