டென்னிஸ்: தோற்றாலும் மக்கள் மனத்தை வென்ற லேய்லா

Spread the love


Images

  • leyla

    படம்: REUTERS 

பெண்கள் டென்னிஸில் இப்போது இரண்டு பதின்ம வயது நட்சத்திர வீராங்கனைகள் பலரின் கவனத்தை ஈர்த்துவருகின்றனர்.

ஒருவர் அமெரிக்கப் பொது விருதை வென்றுள்ள பிரிட்டனின் 18 வயது எம்மா ரடுக்கானு (Emma Raducanu).

மற்றொருவர் இறுதி ஆட்டத்தில் அவரிடம் தோற்ற கனடாவின் 19 வயது லேய்லா பெர்னான்டஸ் (Leylah Fernandez).

போட்டியில் லேய்லா தோற்றாலும் அவர் நியூயார்க் மக்கள், டென்னிஸ் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடிக்கத் தவறவில்லை.

ஆட்டத்திற்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய லேய்லா…

20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலில் இருந்து எப்படி நியூயார்க் மீண்டு வந்து உறுதியாக நிற்கிறதோ, அதே போல் எனக்கும் உறுதி இருக்கும் என்று நம்புகிறேன்.

தாக்குதல் நடந்தபோது லேய்லா பிறக்கக்கூட இல்லை. இருப்பினும் படங்கள் மூலமாகவும் தமது பெற்றோர் மூலமாகவும் அதைப் பற்றி தெரிந்துகொண்டதாக அவர் கூறினார்.

நியூயார்க் மக்களுக்கு அந்தத் தாக்குதல் தந்த வலியையும் வேதனையையும் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாக லேய்லா கூறினார்.

தாக்குதலில் இருந்து மீண்டு வந்த நியூயார்க் மக்களின் தன்னம்பிக்கையும் வலிமையும் தம்மை ஈர்த்ததாகச் சொன்னார் அவர். 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: