டென்னிஸ்: அமெரிக்கப் பொது விருது – தடுப்பூசிச் சான்றிதழ் இருந்தால்தான் விளையாட்டு அரங்கினுள் அனுமதி

Spread the loveImages

  • tennis

    படம்: REUTERS

அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டியில், COVID-19 தடுப்பூசிச் சான்றிதழ் இருந்தால்தான் விளையாட்டு அரங்கிற்குள் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் தொடங்க, இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில், அந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

விளையாட்டு அரங்கிற்குள் நுழையும் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தங்களது தடுப்பூசிச் சான்றிதழைப் போட்டியின்போது கொண்டுவர வேண்டும் என்று நியூயார்க் நகர மேயர் அலுவலகம் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, போட்டி ஏற்பாட்டுக்குழுவும் அதைப் பின்பற்றுகிறது.

ஒருமுறையாவது தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை, ரசிகர்கள் காட்ட வேண்டும்.

போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு அந்தக் கட்டுப்பாடு இல்லை.

கடந்த ஆண்டு அமெரிக்கப் பொது விருதுப் போட்டி, ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றது.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: