டுரியானில் செய்யப்பட்ட வித்தியாசமான உணவுப் பொருள்கள்…சாப்பிடுவீர்களா?

Spread the loveடுரியான் என்றாலே மூக்கைப் பிடித்துக்கொண்டு முந்நூறு கிலோமீட்டர் ஓடுவோர் ஒருபுறமிருக்க, டுரியான் பழங்களின் மணத்தால் சுண்டி இழுக்கப்படுவர்களும் இருக்கின்றனர்.

வேறு சிலரோ டுரியான் மீது தங்களுக்குள்ள பிரியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று பிரபல உணவுகளுடன் அதைச் சேர்த்துள்ளனர்.

டுரியான் பிராட்டா

வாழைப்பழப் பிராட்டா, சாக்லெட் பிராட்டா, சீஸ் பிராட்டா போன்ற பிராட்டா வகைகளில் ஒன்று டுரியான் பிராட்டா. மொறுமொறுப்பான பிராட்டாவிற்குள் கொளகொளவென்ற டுரியான் சாந்து, நாவிற்கு புதுச் சுவையை அறிமுகம் செய்கிறது.

டுரியான் Fried Rice

சுடச்சுடச் செய்யப்பட்ட Fried Rice. அதன்மீது டுரியான் சாந்து. கேட்கச் சற்று வியப்பாக இருந்தாலும், ருசியான அனுபவம் என்கின்றனர் அதைச் சுவைத்துப் பார்த்தவர்கள். காரமாக இருக்கும் சோற்றில் இனிப்பான டுரியான் சேர்ப்பதால் சுவை கூடுகிறதாம்.

டுரியான் சூப்

கொதிக்கும் சூப்பில் டுரியான். காய்கறிகள், மாமிசம் போன்றவற்றைச் சேர்த்து சூப்பை ருசிக்க வேண்டும். டுரியான் வெறியர்கள் இதைச் சுவைத்துப் பார்க்கலாம்.

டுரியான் சீ சியோங் ஃபான்

பாரம்பரியச் சீன உணவுகளில் ஒன்று சீ சியோங் ஃபான்.
அரிசி மாவில் மென்மையாகச் செய்யப்படும் உணவுப் பொருளில் இறால், காய்கறிகள் சேர்க்கப்படுவதுண்டு. அவற்றுக்குப் பதிலாக டுரியான் சுளைகள் சேர்க்கப்படுகின்றன.

டுரியான் பிஸ்ஸா

பலவகை காய்கறிகள் போட்டு பிஸ்ஸா செய்வதுண்டு. இனிப்புப் பிஸ்ஸா பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். பிஸ்ஸா தயாரிப்பில் புத்தாக்கத்தைப் புகுத்தியுள்ளது சிங்கப்பூர். பிஸ்ஸா ரொட்டி மீது டுரியான் சாந்து தடவப்பட்டு அதன்மீது பாலாடைக் கட்டிகள் தூவப்படுகின்றன. பலர் இந்த மாறுபட்ட தயாரிப்பை விரும்பிச் சாப்பிடுகின்றனர். 

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *