‘டிஷ்யூ பேப்பர்’ விலை ரூ. 7.4 கோடி * மெஸ்சி பயன்படுத்தியது

Spread the love


பாரிஸ்: மெஸ்சி பயன்படுத்திய ‘டிஷ்யூ பேப்பர்’ அடிப்படை ஏலத் தொகை ரூ. 7.4 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி 34. தனது 13 வயதில் ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணியில் இணைந்தார். 21 ஆண்டுகளாக அணியில் நீடித்த இவர், 778 போட்டிகளில், 672 கோல் அடித்து, 35 கோப்பை வென்று தந்தார். கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக, மெஸ்சியை பார்சிலோனா அணி வெளியேற்றியது.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் மெஸ்சி, மனைவி, குழந்தைகளுடன் பங்கேற்றார். ஒருகட்டத்தில் மெஸ்சி கண்ணீர் விட்டு அழுதார். அப்போது ‘டிஷ்யூ பேப்பர்’ கொண்டு துடைத்து விட்டு, கீழே போட்டு விட்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் அதை எடுத்து, சர்வதேச ஏல இணையதளம் ‘மெய்கெடுயோ’ வில் விற்பனைக்கு வைத்துள்ளார். இதன் அடிப்படைத் தொகை ரூ. 7.4 கோடியாக நிர்ணயித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘இதில் மெஸ்சியின் மரபணு பொருட்கள் உள்ளன. இதைக் கொண்டு ‘குளோனிங்’ முறையில் புதிய அர்ஜென்டினா அணி கேப்டனை உருவாக்கலாம்,’’ என கற்பனை கலந்து தெரிவித்துள்ளார்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: