‘டிரா’ செய்தது விண்டீஸ்: இலங்கை அணி ஏமாற்றம்

Spread the love


ஆன்டிகுவா: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் போனர் சதம் கடந்து கைகொடுக்க விண்டீஸ் அணி ‘டிரா’ செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 169, விண்டீஸ் 271 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 476 ரன்கள் குவித்தது. பின், 375 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணி 4ம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 34 ரன் எடுத்திருந்தது. பிராத்வைட் (8), போனர் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

போனர் சதம்: ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை தொடர்ந்த விண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (23) ஏமாற்றினார். அடுத்து வந்த கைல் மேயர்ஸ் (52) அரைசதம் கடந்தார். ஜெர்மைன் பிளாக்வுட் (4) ஏமாற்றினார். தனிநபராக 7 மணி நேரத்திற்கு மேல் போராடிய போனர், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து, அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்டார்.

கடைசி நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் விண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு 236 ரன் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி ‘டிரா’ ஆனது. போனர் (113), ஜேசன் ஹோல்டர் (18) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர் 0–0 என, சமநிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருதை போனர் வென்றார். இரண்டாவது டெஸ்ட் வரும் மார்ச் 29ல் ஆன்டிகுவாவில் துவங்குகிறது.

 

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: