டாஸ் வென்றது இங்கிலாந்து: அஷ்வின் இல்லை; இந்திய அணியில் இரு மாற்றங்களைச் செய்த கோலி | England elect to bowl as India include Umesh and Shardul in playing XI, no place for Ashwin

Spread the love

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இந்த 4-வது டெஸ்ட்டிலும் கேப்டன் கோலி வாய்ப்பு வழங்கவில்லை.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா, இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் ஓவல் மைதானத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நடக்கிறது.

ஓவல் மைதானம் இந்திய அணிக்கு ராசியில்லாதது. கடைசியாக கடந்த 1971-ம் ஆண்டு இந்திய அணி அஜித் வடேகர் தலைமையில் வென்றது. அதன்பின் இதுவரை ஓவல் மைதானத்தில் இந்திய அணி வென்றதே கிடையாது. 2007-ம் ஆண்டுக்குப் பின் இந்த மைதானத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற, 2-வது இன்னிங்ஸில் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் இந்த ஆடுகளத்தில் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்காமல் கேப்டன் கோலி, மீண்டும் ஜடேஜாவுக்கே வாய்ப்பு வழங்கியுள்ளார். முகமது ஷமி, இசாந்த் சர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவும், ஷர்துல் தாக்கூரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியில் சாம் கரனுக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸும், பட்லருக்கு பதிலாக ஒலே போப்பும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே, கேப்டன் கோலி இருவரும் இந்தத் தொடர் முழுவதும் மோசமான ஃபார்மில் உள்ளனர். அதிலும் 3 டெஸ்ட்களில் கோலி 124 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

இப்போதுள்ள நிலையில் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரஹானே இருவருக்கும் ஓய்வு அளித்துவிட்டு விஹாரி, சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோரைக் கொண்டுவரலாம்.

கடந்த 2 டெஸ்ட்களில் சொதப்பிய புஜாரா கடந்த போட்டியில் 91 ரன்கள் அடித்து ஃபார்முக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளது இந்தப் போட்டியில் தெரிந்துவிடும். முதல் 25 ஓவர்கள் மிகவும் முக்கியமானது என்பதால், இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு தாக்குப் பிடிப்பார்கள் என்பது தெரிந்துவிடும்.

கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து அஜின்ஹயே ரஹானே சேனா நாடுகள் எனச் சொல்லப்படும், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் சராசரி 32 ரன்கள் மட்டுமே வைத்துள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: