ஜோ ரூட்டின் க்ளாஸ்|இந்தியாவை மீட்க உருமாறிய ராகுல் டிராவிட்டும், லட்சுமணும் தேவை… கிடைப்பார்களா? | England’s joe Root took away the game from india in leeds test

Spread the love


இந்தியாவின் சொதப்பல்!

தற்போதைய உலக கிரிக்கெட்டில் ரொம்பவே வீக்கான டாப் ஆர்டரை கொண்டிருக்கும் அணி இங்கிலாந்துதான். தொடர்ச்சியாக சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆகி மொத்த பாரத்தையும் ரூட் மீது ஏற்றிவிடுவார்கள். முதல் இரண்டு போட்டிகளிலுமே கூட அப்படித்தான் நடைபெற்றிருந்தது. ஆனால், இந்த போட்டியின் கதையே வேறு.

சமீபாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இப்படியொரு மிரட்டலான பர்ஃபாமென்ஸை கொடுத்ததே இல்லை. இரண்டு மூன்று திட்டங்கள் இல்லாமல் ஒரே திட்டத்தோடு அல்லது கடந்த போட்டியின் கார்பன் காப்பியாக வீசுவதையே இந்தியா வழக்கமாக வைத்திருக்கிறது. இஷாந்த் ஷர்மா மாதிரியான அனுபவமிக்க பௌலர்கள் கூட பௌலிங் மெஷின் மாதிரி எந்தவித சர்ப்ரைஸுமே இல்லாமல் தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கிறார். நியூபால் எடுக்கப்பட்டவுடன் பேட்டிங் செய்யும் அணி எப்போதுமே கொஞ்சம் அடக்கி வாசிக்கும். ஆனால், நேற்று இந்திய அணி இரண்டாவது நியூபாலை கையில் எடுத்து வீசிய முதல் 10 ஓவர்களில் மட்டும் 56 ரன்களை வழங்கியிருந்தது.

பழைய பந்தில் ஜடேஜா வீசினாலும் அடித்து துவம்சம் செய்திருந்தார்கள். அஷ்வின் ப்ளேயிங் லெவனில் இல்லாதது பின்னடைவாக இருந்தது. பர்ன்ஸ், மலான் போன்ற பேட்ஸ்மேன்களை அஷ்வின் கொஞ்சமேனும் சிரமமாவது படுத்தியிருப்பார். அவரை பென்ச்சில் உட்கார வைத்ததால் அதற்கும் வழியில்லாமல் போனது.

லார்ட்ஸ் தோல்விக்கு பிறகு லீட்ஸில் 345 ரன்கள் லீடோடு கம்பீரமாக எழுந்து நிற்கிறது இங்கிலாந்து அணி. இன்னமும் டிக்ளேர் செய்யவில்லை. கடைசி இரண்டு விக்கெட்டுகள் ஆடும் வரை ஆடட்டும் என ரூட் நினைக்கலாம். இவ்வளவு பெரிய லீட் இந்தியாவுக்கு இமாலய சவால். அதற்கு மேல் இங்கிலாந்துக்கு ஒரு டார்கெட்டை வேறு செட் செய்ய வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 500 ரன்களையாவது இந்தியா எடுத்தாக வேண்டும். தற்போதைய நிலைப்படி இது அசாத்தியத்திலும் அசாத்தியம். உருமாறிய ராகுல் டிராவிட்டும், லட்சுமணும் இன்று களமிறங்கினல் மட்டுமே தோல்வியைத் தடுப்பது சாத்தியம். குறைந்தபட்சமாக இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முயற்சிக்கலாம்.

கிரிக்கெட்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற ஒற்றை பழமொழி மட்டுமே இந்தியாவின் இப்போதைய நம்பிக்கையாக இருக்கிறது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: