ஜோகோவிச் எனும் ‘கடவுளை’ வீழ்த்தி அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம்… மெத்வதேவ் வென்றது எப்படி? | Daniil Medvedev wins us open 2021 by defeating Novak Djokovic

Spread the love

இந்த வெற்றிகள் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம்களை வென்றவர்களின் பட்டியலில் 20 கிராண்ட் ஸ்லாம்களுடன் ஃபெடரர் மற்றும் நடாலுடன் இணைந்தார். ஆனால், இது ஜோகோவிச்சுக்கு போதாதே. அவர்கள் இருவரையும் தாண்டிய ஒரு உச்சபட்ச இடத்தை பிடிப்பதற்கு இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் வெற்றியே தேவை. அமெரிக்க ஓபன் தொடங்கியது. ஜோகோவிசுக்கான டார்கெட் லாக் செய்யப்பட்டது. இந்த தொடரில் ஃபெடரர் இல்லை. நடால் இல்லை. ஜோகோவிச்சின் வெற்றி எளிதில் சாத்தியப்படும் எனத் தோன்றியது. எதிர்பார்த்ததை போலவே இறுதிப்போட்டிக்கு வந்தார். ஜோகோவிச் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம்களையும் வென்று அரிய சாதனையை செய்யப்போகிறார், அந்த வரலாற்று தருணத்தை அருகிலிருந்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெரும் ஆவலுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே ‘ஆர்தர் ஆஷ்’ மைதானத்தில் கூடியிருந்தது.

கடைசியாக 1969-ல் ராட் லேவர் ஒரே ஆண்டில் கிராண்ட்ஸலாமின் நான்கு தொடர்களையும் வென்றிருந்தார். கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்கு பிறகு ஜோகோவிச்சுக்கு அப்படி ஒரு சாதனையை செய்யும் வாய்ப்பு அமைந்திருப்பதால் ராட் லேவரே இந்த போட்டியை காண நேரில் வருகை தந்திருந்தார். ஆர்தர் ஆஷ் மைதானத்தில் குழுமியிருந்த அத்தனை பேர் மனதிலும் ஒரே ஒரு விஷயம்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஜோகோவிச் இந்த போட்டியை வெல்லப்போகிறார், வரலாற்றில் இடம்பிடிக்க போகிறார், ஒரு மகத்தான தருணத்தை அருகிலிருந்து அனுபவித்த பெருமிதம் நமக்கு கிடைக்கப்போகிறது என்பது மட்டுமே நிறைந்திருந்தது. நடால் ரசிகர்கள் கூட ஜோகோவிச் எப்படியும் வென்றுவிடுவார் என கணித்து ஜெலுசில் பாட்டில்களோடு தயாராக இருந்தனர்.

ஆனால், நடந்தது வேறு. ரஷ்யாவை சேர்ந்த மெத்வதேவ் ஜோகோவிச்சை நேர் செட் கணக்கில் வீழ்த்தி அமெரிக்க ஓபனை தட்டிச்சென்றார். வரலாற்று தருணத்தை அனுபவிக்க போகிறோம் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு இந்த வருடத்தின் மிகப்பெரிய அப்செட்டை பார்க்கும் வாய்ப்பே கிடைக்கப்பெற்றது.

மெத்வதேவ்

மெத்வதேவ்
Seth Wenig

மெத்வதேவ் ரஷ்யாவைச் சேர்தவர். 25 வயதான இவர் 2014 முதல் தொழில்முறையிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடிவருகிறார். 2019 அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக முன்னேறிய மெத்வதேவை, நடால் மாஸ்டர் க்ளாஸ் எடுத்து ரன்னர் அப் ஆக்கியிருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சிடம் சிக்கி சின்னாபின்னமாகி ரன்னர் அப் ஆனார் மெத்வதேவ். ஒட்டுமொத்தமாக அவரின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி இது.

ஜோகோவிச்

ஜோகோவிச்
Elise Amendola

அதைபோன்றே முதல் செட்டை மெத்வதேவே வென்றார். முதலில் ஜோகோவிச் கொஞ்சம் இறுக்கிப்பிடித்தாலும் இந்த செட்டை 6-4 என சிறப்பாக முடித்து 1-0 என லீட் எடுத்தார் மெத்வதேவ். ஜோகோவிச் முதல் செட்டை இழப்பதில் எந்த ஆச்சர்யமுமே இல்லை. அவருடைய கேம் ப்ளானே அப்படித்தான் இருக்கும். எம்.ஜி.ஆர் மாதிரி மூணு அடி வாங்கிவிட்டுத்தான் திருப்பி அடிப்பார். அந்த இன்ஜின் சூடுபிடிக்கக் கொஞ்ச நேரம் எடுக்கும். மேலும், இறுதிப்போட்டிக்கு முன்பான ஐந்து போட்டியிலுமே ஜோகோவிச் முதல் செட்டை தோற்றுதான் ஆரம்பித்திருந்தார். ஆனால், இறுதியில் போட்டியை வென்றார். ஜோகோவிச் ஃபார்முலா படி எல்லாமே சரியாக சென்றதால் அனைவருமே செம கூலாக போட்டியை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இரண்டாவது செட்டில்தான் விஷயமே புரிந்தது. மெத்வதேவ் தனது வலுவான சர்வ்கள் மூலமே தொடர்ந்து பாயின்டுகளை அள்ளினார். ஜோகோவிச் அந்த சர்வ்களை ரிட்டன் செய்யத் தடுமாறினால் கூட பரவாயில்லை. ஆனால், அவர் அதற்கு முயற்சிக்கக்கூட இல்லை.

ஜோகோவிச்

ஜோகோவிச்
Seth Wenig

பல கேம்களில் முதல் இரண்டு புள்ளிகளை எடுத்து ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஜோகோவிச்சுக்கு கிடைத்தது. ஆனால், அத்தனையையும் கோட்டைவிட்டார். மெத்வதேவின் கால்கள் பம்பரமாக சுழன்றது. நரித்தனத்தில் ஊறித்திளைத்ததை போன்ற அவரின் ரேக்கட் நெட் ப்ளேயில் லாவகமாக ஜோகோவிச்சை ஏமாற்றிக் கொண்டிருந்தது.

இன்னொரு பக்கம் ஜோகோவிச் நகர மறுத்த கால்களின் மீது தனது கோபத்தை காண்பித்துக் கொண்டிருந்தார். விரக்தியில் நிறைய unforced error-களை செய்தார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: